நானே ப்ரம்மம். ப்ரம்மமே நான்
முதலும், இடையும், கடையும் இல்லாதவன். அவயங்களில்லாதவன். பெயர், கோத்திரம், சூத்திரம், ஜாதி, வர்ணங்கள் இல்லாதவன். ஆண், பெண், அலி என்ற விகாரங்கள் இல்லாதவன். பிறப்பு, இறப்பு இல்லாதவன். பாவ, புண்ணியங்கள் இல்லாதவன். தத்துவங்களுக்கு அப்பாற்ப்பட்டவன். எங்கும், எல்லாவற்றிலும் சமரசமாய் நீக்கமற நிறைந்திருப்பவன். இத்தனை வல்லமைகளையும் பெற்ற பரமாத்மாவை, இறையாற்றலை அறிவது எவ்வாறு ? இவ்வுருவமுடையவன் என்று வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உனக்கு இனி என்ன விதமான பூஜைகளை நான் செய்வேன் ? உலகுக்கே ஆதரமாய் இருக்கும் உனக்கு என்ன விதமான ஆஸனத்தை நான் போடுவேன் ? பஞ்ச பூதங்களாய், சகஜ சுபாவங்களோடு திகழும் உனக்கு இரண்டு கைகளால் நீர் எடுத்து(அர்க்ய பாத்தியங்கள்) எப்படி விடுவேன் ?
எல்லாவற்றையும் பரிசுத்தம் செய்யும் உனக்கு ஆசமனம் எவ்விதமாய்ச் செய்வேன் ? மலினமில்லாமல் பரிசுத்தனாய் பிரகாசித்துக் கொண்டிருக்கும் உனக்கு இந்த பூமியில் உள்ள நீரால் எப்படி அபிஷேகம் செய்வேன் ? பிரஞ்பஞ்சத்தையெல்லாம் கடந்த உனக்குத் தகுந்த வஸ்திரத்தை எங்கிருந்து கொண்டு வந்து அணிவிப்பேன் ? விசாரித்து தெரிந்து கொள்ளும் அளவுக்கு குலம், கோத்திரம் இல்லாத உனக்கு யஞ்ஞோபவீதம் என்னும் பூனூலை எப்படி அணிவிப்பது ? அவயங்களே இல்லாத உனக்கு எப்படி அலங்காரம் செய்வது ? நிரஞ்சனனான உனக்கு எப்படி தூபம் காட்டுவது ? சூரிய, சந்திரர்களையே பிரகாசிக்கச் செய்யும் உனக்கு என்ன தீபத்தைக் கொண்டு வந்து காட்டுவது ?
ஆதியும், அந்தமும் இல்லாத உனக்கு என்ன மந்திரங்களைச் சொல்லி, என்ன புஷ்பத்தை எடுத்து சாற்றுவது ? பரிபூரணனாய், நித்ய திருப்தி உடையவனாய்த் திகழும் உனக்கு எவ்வளவு நைவேத்தியத்தை நான் படைக்க முடியும் ? எப்போதும் ஆனந்தமுடையவனாய், பேரானந்தமாய் விளங்கும��
0 comments:
Post a Comment