ஒரு முக்கிய தகவல் (All share news)

Job websites - Job websites

வேலை தேடும்
நண்பர்களுக்கு ஓர்
தகவல் !!

வேலை தேடுவதற்கு
உதவும்
இணையதளங்களை
கொடுத்துள்ளோம்.
இந்த
தளங்களில் உங்கள்
தகவல்களை பதிவு
செய்து உங்கள்
தகுதிக்கும்
திறமைக்கும் உரிய
வேலையை பெற்று
வாழ்வில்
வெற்றி பெற
வாழ்த்துகள்....
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள்
பற்றி அறிந்துகொள்ள::
www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in

இந்த
பதிவை வேலை தேடும்
உங்கள்
நண்பர்களுக்கும்
பகிர்ந்து உதவுங்கள்...

உலகிலேயே முதலில் தோன்றிய கோவில் எது தெரியுமா? இராமநாதபுரத்தில்
சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.
இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.
சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.
உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.
இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.
உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.
பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.
மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு
முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.
ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன.
வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது.
இடதுபுறம் உள்ள கோபுரமh. மொட்டையாக காணப்படுகிறது. பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.
ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது சிறப்பம்சமாகும்.

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கிறார்

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..?

தலை - சிவபெருமான்
நெற்றி - சிவசக்தி
வலது கொம்பு - கங்கை
இடது கொம்பு - யமுனை
கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.
கொம்பின் அடியில் - பிரம்மன், திருமால்
மூக்கின் நுனி - முருகன்
மூக்கின் உள்ளே - வித்யாதரர்கள்
இரு காதுகளின் நடுவில் - அஸ்வினி தேவர்
இரு கண்கள் - சூரியன், சந்திரன்
வாய் - சர்ப்பாசுரர்கள்
பற்கள் - வாயுதேவர்
நாக்கு - வருணதேவர்
நெஞ்சு - கலைமகள்
கழுத்து - இந்திரன்
மணித்தலம் - எமன்
உதடு - உதய அஸ்த்தமன சந்தி தேவதைகள்
கொண்டை - பன்னிரு ஆதித்யர்கள்
மார்பு - சாத்திய தேவர்கள்
வயிறு - பூமிதேவி
கால்கள் - வாயு தேவன்
முழந்தாள் - மருத்து தேவர்
குளம்பு - தேவர்கள்
குளம்பின் நுனி - நாகர்கள்
குளம்பின் நடுவில் - கந்தர்வர்கள்
குளம்பின் மேல்பகுதி - அரம்பெயர்கள்
முதுகு - ருத்திரர்
யோனி - சப்த மாதர் (ஏழு கன்னியர்)
குதம் - லட்சுமி
முன் கால் - பிரம்மா
பின் கால் - ருத்திரன் தன் பரிவாரங்களுடன்
பால் மடி - ஏழு கடல்கள்
சந்திகள் - அஷ்ட வசுக்கள்
அரைப் பரப்பில் - பித்ரு தேவதை
வால் முடி - ஆத்திகன்
உடல்முடி - மகா முனிவர்கள்
எல்லா அவயங்கள் - கற்புடைய மங்கையர்
சிறுநீர் - ஆகாய கங்கை
சாணம் - யமுனை
சடதாக்கினி - காருக பத்தியம்
வாயில் - சர்ப்பரசர்கள்
இதயம் - ஆகவணியம்
முகம் - தட்சரைக் கினியம்
எலும்பு, சுக்கிலம் - யாகத் தொழில்

அனைத்தும் பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார்.

ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.

அப்போது பசு லட்சுமிதேவியிடம், ’நீ சஞ்சல குணம் உள்ளவள்.

எனது அவயங்களில் எல்லா இடங்களும் அனைவருக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.

கழிக்கும் இடம் மட்டுமே மீதம் உள்ளது’ என்று சொன்னது.

லட்சுமி தேவியும், ’அந்த இடத்தையாவது எனக்கு ஒதுக்கித் தர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டதோடு, பசுவின் குதத்தில் தனக்கான இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்தாள்.

லட்சுமி தேவியைப் போலவே ஆகாயகங்கையும் தனக்கான இடமாக பசுவின் சிறுநீரைத் தேர்ந்தெடுத்தாள்.

அதனால்தான் பசுவின் சாணம் லட்சுமியின் அம்சமாகவும், சிறுநீர் கங்கையின் அம்சமாகவும் கருதப்படுகிறது...

திருச்சிற்றம்பலம்.

சிவ மூலமந்திர இயல்

1. சைவ சமயிகள் முறையாக எண்ண வேண்டிய மூல மந்திரம் யாது?

திருஐந்தெழுத்து

2. திருவைந்தெழுத்தாவது யாது?

நமசிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரம் வேதத்தின் நடுவனதாகவும், நால்வர் பெருமக்களால் துதிக்கப்பட்டதாகவும் எல்லோரும் எப்போதும் எண்ணத்தக்கதாகவும் உய்தி தருவதாகவும் உள்ள திருவைந்தெழுத்து மந்திரம் ஆகும். இது தூல பஞ்சாக்கரம் எனப்படும்.  சூக்குமம், காரணம் என்று சிறப்புப் பஞ்சாக்கரங்கள் உண்டு. குருநாதர் மூலம் திருவைந்தெழுத்து உள்ளிருத்தப் பெற்றவர்கள் அந்த  திருவைந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சாலச் சிறந்தது.

3. திருவைந்தெழுத்தைக் எண்ணத் தகுதி உடையவர் யாவர்?

எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோரும் மனதில் அன்புடன் திருவைந்தெழுத்தை எண்ணி இருக்க வேண்டும். குறிப்பு: கீழ் வரும் விடைகள்  மந்திர ஜபம் செய்யும் முறையைச் சொல்லுகின்றன. மற்றபடி எங்கும் எப்போதும் எல்லோரும் திருவைந்தெழுத்தை எண்ணி இருத்தலே சிறப்பு. துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் - சம்பந்தர்.

4. திருவைந்தெழுத்திலே எத்தனை உரு முறையாகக் கணிக்க வேண்டும்?

நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் முறையாகக் கணிக்க வேண்டும்.

5. எப்படி இருந்து கணிக்க வேண்டும்?

முழந்தாள் இரண்டையும் மடக்கிக் காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலப்புறங் காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்து கொண்டு அமைதியாகச் சீரான மூச்சுடன் கணிக்க வேண்டும்.

6. திருவைந்தெழுததைக் கணிக்கும் போது மனம் எவ்வாறு இருக்க வேண்டும்?

மனம் சிவபெருமானிடத்தில் அழுந்திக் கிடக்க வேண்டும்.

7. நிற்கும் போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், கிடக்கும் போதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் போதும் மனதை எதில் பதித்தல் வேண்டும்?

உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் மனதைப் பதித்தல் வேண்டும்.

8. மந்திர உபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்? குருவை வழிபட்டு அவருக்கு வருடந்தோறும் இயன்ற தட்சணை கொடுத்து கொண்டே செபித்தல் வேண்டும்.

9. திருவைந்தெழுத்தை முறையாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?

நூற்றெட்டு உருவாயினும், ஐம்பது உருவாயினும், இருபத்தைந்து உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.

10. கணித்தற்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?

செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். ( விரலிறை - கட்டைவிரல் ).

11. செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?

உருத்திராக்க மணி கொண்டு செய்வது உத்தமம்.

12. செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?

இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியும் கொள்ளத் தக்கதாகும். இல்வாழ்வான் நூற்றெட்டு மணி, ஐம்பத்து நான்கு மணிகளாலும் செபமாலை செய்து கொள்ளலாம்.

13. செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?

இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டு முக மணியும், பதின்மூன்று முக மணியும் செபமாலைக்கு ஆகாவாம். அன்றியும் எல்லா மணியும் ஒரே விதமாகிய முகங்களை உடையனவாகவே கொள்ளல் வேண்டும். பல விதமாகிய முகமணிகளையுங் 

கலந்து கோத்த செபமாலை ஆகாது.

14. செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?

வெண்பட்டிலேனும், பருத்தியிலேனும் இருபத்து ஏழிழையினால் ஆக்கிய கயிற்றினாலேனும் கோத்தல் வேண்டும்.

15. செபமாலையை எப்படி செய்தல் வேண்டும்?

முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோத்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு மணி என்று பெயர்.

16. செபமாவது யாது?

தியானிக்கப்படும் பொருளை எதிர்முகமாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.

17. மந்திரம் என்பதற்கு பொருள் யாது?

நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே மந்திரம் என்னும் பெயர் நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவ சத்திக்குமே செல்லும். ஆயினும் வாக்கியத்துக்கும், வாசகத்துக்கும் செல்லும். எனவே மந்திரம், வாச்சிய மந்திரம், 

வாசக மந்திரம் என இரு திறப்படும் என்றபடியாயிற்று. ( மந் - நினைப்பவன்; திர - காப்பது ).

18. மானசமாவது யாது?

நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருந்தி மனசினாலே செபித்தலாம்.

19. உபாஞ்சுவாவது யாது?

தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்று பெயர்.

20. வாசகமாவது யாது?

அருகிலிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.

21. இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?

ஆம். வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசம் கோடி மடங்கு பலமும் தரும்.

22. எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?

வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும், மரப்பலகை, துணி, இரத்தினக் கம்பளம், மான்தோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்றதொன்றிலே முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையினுள்ளே வலப்புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு செபித்தல் வேண்டும்.

23. எப்படி இருந்து செபித்தல் ஆகாது?

சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டிக் கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கௌபீனம் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரம் தரியாதும், பேசிக்கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றை பார்த்துக் கொண்டும் செபிக்கலாகாது. செபம் செய்யும்போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் ஆகியவை ஆகாவாம்.

24. செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?

பிறர் கண்ணுக்கு புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகச் செபிக்கில் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனதிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயகமணி அடுத்த, முகம் மேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும், முத்தியின் பொருட்டு மேல் நோக்கித் தள்ளியும் செபித்து, பின்பு நாயகமணி கைபபட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும்போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படலாகாது.

25. திருவைந்தெழுத்து செபத்தால் பயன் என்ன?

திருவைந்தெழுத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின் விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தல் போல் ஆன்மாவிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி எப்போதும் இன்புற்றிருக்கும் ஞானானந்தத்தைப் பிரசாதித்து அருளுவார். 

ஓம் நமசிவாய.

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?

குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
- சற்று ஒரு பார்வை...

குலதெய்வம்...
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.

தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.

குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.

மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.

குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.

அதன் சக்தியை அளவிடமுடியாது...

எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.

அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.

எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.

இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?

நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.

இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...

இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!

நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.

இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்!...

விஞ்ஞான முறையில் யோசித்தால்...

ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே...

ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.

இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.

இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது.

தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.

தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன.

ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும்...

இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது. என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.

ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும் தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.

ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது...

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.

இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...

பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்...

பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை...

ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று.

மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.

எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...

அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.

பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...

திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.

இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்குு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...

குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.

குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது maadham ஒரு முறையாவது) செல்லுங்கள்.

அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.

அக்கோவிலுக்கு உதவுங்கள்.

பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுவதற்கான உண்மையான காரணம் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.
முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

கருவறையில் 10 மாதம்

பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

கடல் நீர்

சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

வெளியேறும் வழி

உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

மொட்டை போடாவிட்டால்?

ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

நேர்த்திக்கடன்

இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.
மூன்று வயதில் ஓர் மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

ஆன்மீக ரீதிக்கே மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.

இனிமேலாவது ஒரு செயலைப் பின்பற்றும் முன் அதற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள முயற்சித்து, அந்த காரணத்தை மற்றவர்களுக்கும் சொல்லி பின்பற்ற வையுங்கள்.

Next PostNewer Posts Previous PostOlder Posts Home